Logo Trop1 (1)

தமிழ் (TROP ICSU in Tamil)

உலகெங்குமுள்ள கல்வித்திட்டங்களில் காலநிலைமாற்றம் மாற்றம் குறித்த பாடம்

நாம் வாழும் இந்தக் காலத்தில் காலநிலை மாற்றமானது முக்கிய சிக்கலாகும்.

உலகின் பல நாடுகள் மற்றும் அவற்றின் குடிமக்களின் நிலையான வளர்ச்சியினை இது பாதிக்கின்றது.

இதற்கு தீர்வு காண வேண்டுமேயானால் இச்சிக்கலின் தாக்கம் குறித்தக் கூறுகளை மக்கள் உணர்ந்திருத்தல் அவசியமாகும்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்கும் முயற்சிகள், உலகளாவிய அறிவியலை மையமாக வைத்து உள்ளூர்களில் வேறூன்றும் தீர்வுகளாகவே இருக்க வேண்டும்.

காலநிலை மாற்றம் குறித்த கல்வியினை முறைசார் கல்வியின் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரை பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உள்ளூர் தீர்வுகளை கண்டறியும்  திறன்களில் ஆயத்தப்படுத்தக்கூடும். இவை பருவநிலை மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொண்டு, விளைவுகளை மட்டுப்படுத்தி, அதன் தாக்கத்திலிருந்து மீள உதவும் தீர்வுகளாக இருக்கக்கூடும்.

TROP ICSU (“Trans-disciplinary Research Oriented Pedagogy for Improving Climate Studies and Understanding”) என்பது பருவநிலை மாற்றம் குறித்த புரிதல் மற்றும் கல்வியினை மேம்படுத்தும் ஒரு ஒழுங்குசார்ந்த  ஆற்றுப்படுத்தும் கல்வியியல் திட்டம் ஆகும் ((https://climatescienceteaching.org/; https://tropicsu.org/)). பருவநிலை மாற்றம் தொடர்புடைய தலைப்புகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மையக் கல்வித்திட்டங்களில் இணைத்து, மாணவர்களிடையே பருவநிலை மாற்றத்தின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்தே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். பருவநிலை மாற்றம் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் குறிக்கோளுடன், மனித இனம் முழுவதும் இணைந்து செயல்பட உதவும் ரீதியில் பருவநிலை மாற்றம் குறித்த அறிவை மக்களாட்சிமயமாக்கும் பார்வையின் ஒரு அங்கமான திட்டமே TROP ICSU. 

சரியான மற்றும் வரையறுக்கப்பட்ட கல்வித்துறுப்புகளைக் கொண்டு பருவநிலை மாற்றம் குறித்த தலைப்புகளை முறைசார் கல்வி கட்டமைப்பின் மையக் கல்வித்திட்டத்தில் இணைக்ககூடிய ஒரு நம்பகத்தன்மையுடனான மூலத்தை வழங்குவதிலேயே இத்திட்டம் பிரதான கவனம் செலுத்துக்கிறது. இந்த அணுகுமுறை மூலம் அனைத்து மாணவர்களும் அவர்களின் மையத்துறைகளை கடந்து பருவநிலை மாற்றத்திற்கான காரணிகள் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியும். மேலும், இதனால் அவர்கள் இந்த உலகளாவிய சிக்கலிற்கு பல புதுமையான உள்ளூர் தீர்வுகளைக் கண்டறியும் திறன்களை வளர்த்துக்கொள்ளக் கூடும்.

எனவே TROP ICSU ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு வளர்ச்சி குறிக்கோள்களில் (United Nations Sustainable Development Goals (SDGs)) நான்காவதான ‘தரமான கல்வி’ மற்றும் பதிமூன்றாவதான  ‘பருவநிலை செயல்பாடு’ ஆகியவற்றின் கீழ் நேரடியாக சேர்ந்துள்ளது.

இத்திட்டத்தின் குறிக்கோள்களை அடையும் பொருட்டு பூனேவிலுள்ள இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Indian Institute of Science Education and Research (IISER), Pune) அமைந்துள்ள TROP ICSU திட்ட அமலாக்கக் குழு, உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட கற்பிக்க உதவும் வளங்களை திரட்டி, ஒன்றினைத்து, வரிசைப்படுத்தி, சரிப்பார்த்து ஒரு  களஞ்சியத்தை உருவாக்கியுள்ளது. இதைக்கொண்டு ஆசிரியர்கள் துறைக்கேற்ற எடுத்துக்காட்டுகள், நேர்வாய்வுகள் மற்றும் நடவடிக்கைகளின் உதவியோடு ஒவ்வொரு துறைக்கேற்ப பருவநிலை மாற்றம் குறித்த தலைப்புகளை பயிற்றுவிக்கக்கூடும். இதன்மூலம் ஏற்கனவே உள்ள கல்வித்திட்டத்துடன் பருவநிலை மாற்றம் குறித்த கல்வியினை இணைக்கும் ஒரு புதுமையான கல்வியியல் அணுகுமுறையினை இத்திட்டம் பறைசாற்றியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்தக்குழு பெரும் எண்ணிக்கையிலான (சில விவரமான படிப்பினைத் திட்டங்களுடனான)  ஒரு பயிற்றுவிக்கும் வளமூலத்தை உருவாக்கி பருவநிலை மாற்ற தலைப்புகளை மையக்கல்வித்திட்டதுடன் இணைப்பது சாத்தியமே என

நிரூபித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து தலைப்புகளை வழக்கமான கல்வித் தலைப்புகளுடன் இணைக்கவும் அத்தலைப்புகளின் அறிவியல் ஏற்புடைமையை சரிபார்கவும் விவரமானதொரு முறைமை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே TROP ICSU தரவுகளை பயன்படுத்தினால் ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனின் தரத்தை உயர்த்திக்கொள்வதோடு மாணவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பிரதான பாடத்திட்டத்திலிருந்து வழுவாமலேயே ஏற்படுத்த முடியும்.  

திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா, பூட்டான், தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, எகிப்து, பிரான்ஸ், ஆஸ்திரி, இங்கிலாந்து, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களிற்கு பயிலரங்குகளை இத்திட்டக்குழு நடத்தியுள்ளது. இப்பயிலரங்குகளில், இக்கல்வித்தரவுகளை உள்ளூர் பயிற்றுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். சில இடங்களில் பருவநிலை மாற்ற நிபுணர்களும் இப்பயிலரங்குகளில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். யு.என்.சி.சி: லேர்ன(UNCC: Learn,), உலக காலநிலை அமைப்பு ( World Meteorological Organization (WMO)) மற்றும் உலக பருவநிலை ஆய்வுத் திட்டம் (World Climate Research Programme (WCRP)) போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல அமைப்புகளுடன் வலுவான இணைவாக்கம் இருப்பதால், இந்த அமைப்புகள் படிப்பினைத் திட்டங்கள் மற்றும் கற்பிக்கும் கருவிகளை சரிபார்பதோடு மட்டும் நில்லாமல்  இந்த முழு திட்டத்தையுமே ஆதரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை பணியிடம் அமைந்துள்ள நியு யார்கில் 2019 ஆம் ஆண்டு மே 14-15 தேதிகளில் நிகழ்ந்த UN STI Forum 2019 எனும் ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி கூட்டத்திலும், ஜூலை 11 2019இல் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை பணியிடத்தில் நிகழ்ந்த வளம்குன்றா வளர்ச்சிக்கான பெருநிலை அரசியல் மன்றம் 2019 (High Level Political Forum on Sustainable Development 2019 (HLPF 2019)) எனும் கூட்டத்தில் “பருநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தரமான கல்வியை நோக்கிய அணுகுமுறைகள் மற்றும்  வழக்கங்கள்” (“Practices and Approaches onquality education towards environment and climate action) எனும் அமர்விலும் இத்திட்டக்குழு அவர்களின் கல்வியியல் முயற்சிகளை விவாதிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் போலாந்தில்

நடைபெற்ற COP 24 மாநாடு மற்றும் பல பருவநிலை மாற்றம் குறித்த கலந்தாய்வுகள், ஆசிரியர்கள்/ பயிற்றுநர்களுக்கான பயிலரங்குகளில் இத்திட்டக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை பலரிடையே குறிப்பாக இளைஞர்களிடையே உலகெங்கும் அதிகரித்துவரும் இச்சூழலில், இத்தாலி போன்ற பல நாடுகள் வெளிப்படையாக பருவநிலை மாற்றம் அனைத்துக் குழந்தையின் கல்வித்திட்டத்திலும் இருக்க வேண்டும் என குரலெழுப்பும் இந்த நிலையில் TROP ICSU சரியான நேரத்தில் துவக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகவே திகழ்கிறது.

TROP ICSU திட்டத்தின் முதல் கட்டம் (2017-2019) சர்வதேச அறிவியல் மன்றத்தின் (International Science Council (ISC)) மூவாண்டு நிதிநல்கையினால் ஆதரிக்கப்பட்டுள்ளது. 

SUBSCRIBE

To Subscribe to our newsletter please enter